ஈரோடு இடைத்தேர்தல்-5 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31ம் தேதி துவங்கியது. இதில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். பல குழப்பங்களுக்கு மத்தியில் இறுதியாக அதிமுக கட்சி சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இவர்களை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. கட்சி உள்ளிட்ட வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள். இதனையடுத்து திமுக சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து வரும் 24ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து நடத்தவுள்ளார் என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம்
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி 5 நாட்கள் பிரச்சாரம் நடத்தவுள்ளார் என்று சமீப தகவல்கள் தெரிவிக்கிறது. அதன் படி, அவர் பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை. இந்த இடைத்தேர்தலின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நிறைவடைந்த நிலையில், 83 வேட்பாளர்கள் மனு ஏற்கப்பட்டதோடு, 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசமும் இன்று 3 மணியோடு நிறைவடைந்து குறிப்பிடத்தக்கது.