NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள்
    பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள்
    இந்தியா

    பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள்

    எழுதியவர் Sindhuja SM
    September 04, 2023 | 05:54 pm 1 நிமிட வாசிப்பு
    பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள்
    11 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.

    இந்த வருடத்திற்கான பொறியியல் சேர்க்கை முடிவடைந்திருக்கும் நிலையில், தமிழிகக்தில் மொத்தமுள்ள 442 பொறியியல் கல்லூரிகளில், 1,06104 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 54,676 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. துணை கவுன்சிலிங்கிற்கு பிறகு காலி இடங்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழிகக்தில் மொத்தமுள்ள 442 பொறியியல் கல்லூரிகளில், 186 கல்லூரிகளில் 80%க்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 263 கல்லூரிகளில் 50% க்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. 61 கல்லூரிகளில் 10%க்கும் குறைவான இடங்களே நிரப்பப்பட்டுள்ளன. 37 கல்லூரிகளில் 10 எண்ணிக்கைக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். 11 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.

    அரசு பொறியியல் கல்லூரிகளில் விரும்பி சேரும் மாணவர்கள் 

    இதற்கிடையில், கவுன்சிலிங்கிற்குப் பிறகு மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளில் ஆய்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 100% இடங்களை நிரப்பிய 16 கல்லூரிகளில் 12 கல்லூரிகள் அரசு பொறியியல் கல்லூரிகளாகும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட(8,263 மாணவர் சேர்க்கை) இந்த ஆண்டு(11,058 மாணவர் சேர்க்கை) அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 10,234 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் இடம் பிடித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு கருவியான ChatGPT மற்றும் அதில் இருக்கும் சிறந்த வேலை வாய்ப்புகள் போன்றவற்றின் மீதான மோகம் மாணவர்களை பொறியியல் படிப்புகளுக்கு ஈர்த்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அண்ணா பல்கலைக்கழகம்
    பொறியியல்

    அண்ணா பல்கலைக்கழகம்

    பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை., பொறியியல்
    பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்  பள்ளி மாணவர்கள்

    பொறியியல்

    ஒரு மாணவர் கூட சேராத 37 தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாடு
    பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு
    இன்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது  தமிழ்நாடு
    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023