நீட் மறுதேர்வு: இந்தியாவில் Telegram செயலிக்கு திடீர் தடை விதித்த மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET UG 2026) மறுதேர்வுக்கு முன்னதாக, வினாத்தாள் கசிவு தொடர்பான போலி வதந்திகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடு விதித்துள்ளது. அத்துடன், இந்தச் செயலியில் உள்ள மிக முக்கிய அம்சம் ஒன்றையும் முடக்கி தேசியத் தேர்வு முகமை (NTA) அறிக்கை வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
NTA STATEMENT REGARDING THE ACTION ON TELEGRAM PLATFORM IN INDIA
— National Testing Agency (@NTA_Exams) June 16, 2026
1. The National Testing Agency (NTA) welcomes the directions issued today in respect of the Telegram platform in India. The directions, issued on recommendations of NTA are calibrated and bounded in time:
(a) a…
உத்தரவுகள்
மத்திய அரசு பிறப்பித்துள்ள 2 முக்கிய உத்தரவுகள்
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000-இன் பிரிவு 69A-இன் கீழ் டெலிகிராம் தளத்திற்கு எதிராக இரண்டு தனித்தனி அவசர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, நீட் மறுதேர்வு நாள் மற்றும் அதற்குப் பிந்தைய சூழலைக் கருத்தில் கொண்டு, ஜூன் 22, 2026 வரை இந்தியாவில் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவதற்கு முழுமையான தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் செயலியில் ஏற்கனவே பதிவிட்ட மெசேஜ்களை எடிட் செய்யும் அம்சம், ஜூன் 30, 2026 வரை இந்தியாவில் முற்றிலுமாக முடக்கப்படுகிறது. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நெட்வொர்க்குகள் மற்றும் குழுக்களைக் கண்டறிந்து முடக்கும் பிற முயற்சிகள் தோல்வியடைந்ததால், இந்த இறுதிக்கட்ட "நேரவரம்பிற்கு உட்பட்ட" நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக NTA விளக்கியுள்ளது.
மோசடி
டெலிகிராம் இலக்கானது ஏன்? NTA அம்பலப்படுத்திய 'எடிட்' மோசடி
"PAPER LEAKED NEET", "Re-NEET 2026", "Private Mafia" போன்ற பெயர்களில் செயல்பட்டு வந்த பல மோசடி டெலிகிராம் சேனல்கள், தன்னிடம் உண்மையான நீட் வினாத்தாள் இருப்பதாகக் கூறி மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்க முயன்று வந்ததை NTA கண்டறிந்துள்ளது. டெலிகிராம் சேனல் அட்மின்கள், தேர்வு தொடங்குவதற்கு முன்பாக ஒரு சாதாரண பொதுவான மெசேஜைப் பதிவிடுவார்கள். தேர்வு முடிந்தவுடன், அதே பழைய மெசேஜை 'எடிட்' செய்து, அதற்குள் ஒரிஜினல் வினாத்தாளைப் பதிவேற்றுவார்கள். இதன் மூலம், தேர்வு நடப்பதற்கு முன்பே தங்களுக்கு வினாத்தாள் கிடைத்துவிட்டது போன்ற போலி ஆதாரத்தை உருவாக்கி, மாணவர்களை ஏமாற்றிப் பணம் பறித்து வந்துள்ளனர். டெலிகிராமில் எடிட் செய்தாலும் பழைய நேரமே காட்டும் என்ற ஓட்டையைப் பயன்படுத்தியே இந்த மோசடி அரங்கேறியுள்ளது.
கைதுகள்
சைபர் கிரைம் அதிரடிப் பாய்ச்சல் மற்றும் கைதுகள்
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் கடந்த சில வாரங்களாகவே இத்தகைய மோசடிக் கும்பல்களை கண்காணித்து வருகிறது. பீகார் போலீசாரின் பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் அகமதாபாத் நகர சைபர் கிரைம் பிரிவினர் நடத்திய சோதனையில், 8 டெலிகிராம் சேனல்களை நடத்தி, சுமார் 1.5 கோடி ரூபாய் வரை மோசடிப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வுக்குத் தயாராகும் மாணவர்களில் பலர் தங்களின் கல்வித் தேவைகளுக்காக டெலிகிராமை பயன்படுத்தி வரும் நிலையில், இந்த தடையால் ஏற்படும் அசெளகரியத்திற்கு NTA வருத்தம் தெரிவித்துள்ளது. இருப்பினும், "தேர்வின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...வினாத்தாள் தருவதாகக் கூறுபவர்கள் அனைவரும் 100% ஏமாற்றுக்காரர்கள். வதந்திகளை நம்பி உங்களின் நீட் பயணத்தைத் தொலைத்துவிடாதீர்கள்" என NTA எச்சரித்துள்ளது.