அணுக முடியாத இந்திய தேர்தல் ஆணைய இணையதளம்; எக்ஸில் புகாரளிக்கும் மக்கள்
இந்தியாவில் இன்று காலை எட்டு மணி முதல் நான்கு மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இது வாக்கு எண்ணிக்கை குறித்த முடிவுகளை பெரும்பான்மையான செய்தி நிறுவனங்கள் நேரலையில் வழங்கி வந்தாலும், ஆன்லைன் பயனாளர்கள் நிறைய பேர் இந்தியா தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் வாக்கு எண்ணிக்கைத் தகவல்களுக்காக அணுகியிருக்கின்றனர். ஆனால், தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்தை அணுக முடியாத நிலை இருந்திருக்கிறது. இது குறித்து பல்வேறு பயனாளர்களும் எக்ஸில் பதிவிட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை சரி செய்ய தேர்தல் ஆணையம் முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தாமதமாக தகவல்களை வழங்கும் தேர்தல் ஆணைய இணையதளம்:
தற்போது பெரும்பாலான பயனாளர்களும் தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தினை அணுக முடிந்தாலும், முடிவுகள் தாமதமாக வழங்கப்பட்டு வருவாதக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள் சமூக வலைத்தளப் பயனாளர்கள். இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும். நான்கு மாநில வாக்கு எண்ணிக்கை குறித்த தகவல்களை உடனடியாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதாவும் முன்னணியில் இருக்கின்றன.