LOADING...
எழும்பூர் ரயில் நிலைய பணி! 5 நாட்களுக்கு புறநகர் ரயில் சேவைகள் ரத்து! முழு விபரம் இதோ
எழும்பூர் ரயில் நிலைய பணி காரணமாக 5 நாட்களுக்கு புறநகர் ரயில் சேவைகள்

எழும்பூர் ரயில் நிலைய பணி! 5 நாட்களுக்கு புறநகர் ரயில் சேவைகள் ரத்து! முழு விபரம் இதோ

எழுதியவர் Vasuki Ravichandran
Apr 04, 2026
01:50 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகளில் இன்றும் (சனிக்கிழமை) முதல் வரும் புதன்கிழமை வரை 5 நாட்களுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேர ரயில்கள் பகுதியளவோ அல்லது முழுமையாகவோ ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் சேவைகள் ரத்து

ரத்து செய்யப்படும் முக்கிய ரயில் சேவைகள்

இன்று (ஏப் 4) மற்றும் ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் இரவு 11.05, 11.30, 11.59 மணிக்குக் கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை (நாளை) அதிகாலை 4.15 மணி மற்றும் இரவு 11, 11.20, 11.40, 11.59 மணிக்குக் கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் டூ கடற்கரை ரயில்களில் தாம்பரத்திலிருந்து இரவு 10.20, 11, 11.40 மணிக்குக் கடற்கரை செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதியளவில் ரத்து செய்யப்படும் ரயில்கள்

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரிமற்றும்  திருமால்பூர் ரயில்களில் மாற்றம்:

தொலைதூரப் புறநகர் ரயில்களும் கடற்கரை - தாம்பரம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 6, 7, 8 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50, 4.15 மணிக்குக் கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் கடற்கரை - தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன. செங்கல்பட்டிலிருந்து இரவு 10.20, 11 மணிக்குக் கடற்கரை வரும் ரயில்களும், திருமால்பூரிலிருந்து இரவு 8 மணிக்குக் கடற்கரை வரும் ரயிலும் தாம்பரம் - கடற்கரை இடையே இயக்கப்படாது. இன்று (ஏப் 4) மற்றும் ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 9.45, 11.10, 11.15 மணிக்குக் கடற்கரைக்கு வரும் மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்; தாம்பரம் - கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

Advertisement

ரயில்வே அறிவிப்பு

பயணிகளுக்கு வேண்டுகோள்

எழும்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரங்கள் மற்றும் தண்டவாளங்களை நவீனப்படுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், அலுவலகம் செல்வோர் மற்றும் வெளியூர் பயணத் திட்டத்தில் இருப்பவர்கள் கீழ்க்கண்டவற்றைக் கவனத்தில் கொள்ளவும். ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நேரங்களில் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செய்பவர்கள் கடைசி ரயில்களை நம்பியிருக்காமல் முன்கூட்டியே மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது நல்லது. பயணிகளின் வசதிக்காக முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் தகவல் மையங்கள் மற்றும் ஒலிபெருக்கி அறிவிப்புகள் மூலம் மாற்றங்கள் விளக்கப்பட்டு வருகின்றன.

Advertisement