அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய பல இடங்களில், இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஏற்கெனவே கடந்த 2021ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டது நினைவிருக்கலாம். இந்நிலையில் இன்று, விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, சென்னையில் இன்று காலை முதல் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.