மஹாதேவ் பெட்டிங் செயலி, சத்தீஸ்கர் முதல்வருக்கு ₹508 கோடி அளித்துள்ளது கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை
மஹாதேவ் பந்தய செயலியின் விளம்பரதாரர்களிடமிருந்து, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இதுவரை ₹ 508 கோடி பெற்றுள்ளதாக, அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமை கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பணப்பரிமாற்றம் விசாரணைக்கு உட்பட்டவை என்று அமலாக்கத்துறை கூறியது. மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் இணைக்கப்பட்ட பணமோசடி நெட்வொர்க்குகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, நேற்று சத்தீஸ்கரில் சோதனைகளை நடத்தியது. அந்த சோதனையில்,₹ 5.39 கோடி ரொக்கத்தை கைப்பற்றியது. மேலும் ரூ. 15.59 கோடி வங்கி இருப்பு முடக்கப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நவம்பர்-2, 2023, நவம்பர்-7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத்தேர்தல்கள் தொடர்பாக மகாதேவ் விளம்பரதாரர்களால் சத்தீஸ்கரில் அதிக அளவு பணம் கொண்டு செல்லப்படுவதாக அமலாக்க இயக்குனரகத்திற்கு, உளவுத்துறை தகவல் கிடைத்தது".
அமலாக்கத்துறையினர் வெளியிட்ட அறிக்கை
"ஹோட்டலில் ED சோதனை நடத்தியது. டிரைடன் மற்றும் பிலாயில் உள்ள மற்றொரு இடம் மற்றும் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக அதிக அளவு பணத்தை வழங்குவதற்காக, குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து அனுப்பப்பட்ட பண கூரியர் அசிம் தாஸை வெற்றிகரமாக இடைமறித்தார்". "5.39 கோடி ரூபாய் (அவரது கார் மற்றும் அவரது வீட்டில்) ரொக்கத் தொகையை ED மீட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட நிதியை, சத்தீஸ்கர் மாநிலத்தில் வரவிருக்கும் தேர்தல் செலவுகளுக்காக, 'பாகேல்' என்ற அரசியல்வாதிக்கு வழங்க, மகாதேவ் செயலி விளம்பரதாரர்கள் ஏற்பாடு செய்ததாக அசிம் தாஸ் ஒப்புக்கொண்டார்". இந்த 'பாகேல்', சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.