Page Loader
இன்று முதல் புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு

இன்று முதல் புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 28, 2024
01:03 pm

செய்தி முன்னோட்டம்

புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. எனினும் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நுகர்வோர் பலரும் மின்கட்டண உயர்விற்கு கண்டனம் தெரிவித்து மேல்முறையீடு செய்திருந்தனர். விசாரணைக்கு பின்னர் இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் புதுச்சேரியில் புதிய மின்கட்டணம் அமலுக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட அதே கட்டணங்கள் மாற்றமின்றி கடைபிடிக்கப்படும். அதன்படி, 50 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கான கட்டணம், யூனிட்டுக்கு ரூ.1.95 ஆக உயர்ந்துள்ளது. 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம், ரூ.2.25-லிருந்து ரூ.2.70 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.25-லிருந்து ரூ.4ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ.5.40-லிருந்து ரூ.6 ஆக உயர்ந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மின் கட்டணம் உயர்வு