Page Loader
சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம் 
சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம்

சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம் 

எழுதியவர் Nivetha P
May 25, 2023
07:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கோடை காலம் துவங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது. இடையிடையே கோடைமழையும், காற்றழுத்த தாழ்வுமண்டலங்கள் வந்துச்சென்றாலும், வெயிலின் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த கொளுத்தும் வெயிலிலும் பொதுமக்களுக்காக போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி இடையூறு இல்லாமல் மக்கள் தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சரியாக செல்ல உதவுவது நமது போக்குவரத்து காவல்துறை. அத்தகைய பணியாற்றும் இவர்களுக்கு சென்னையில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் 3 நாட்கள் முகாம் நடத்தப்படுகிறது. இதற்கான விழா நேற்று(மே.,24)சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தநிலையில், பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதனை துவங்கி வைத்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் இந்த முகாமானது மே.,24 முதல் மே.,26வரை சென்னையின் பல்வேறு இடங்களில் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post