LOADING...
இந்திய கடற்படைக்கு புதிய பலம்! டிஆர்டிஓவின் அசத்தல் கண்டுபிடிப்பு; வானிலிருந்து கடலில் உள்ள கப்பல்களுக்கு பொருட்களை எளிதாக அனுப்பலாம் 
நடுக்கடலில் உதவும் டிஆர்டிஓவின் 'ADC-150' ஏர்-டிராப்பபிள் கன்டெய்னர் சோதனை வெற்றி

இந்திய கடற்படைக்கு புதிய பலம்! டிஆர்டிஓவின் அசத்தல் கண்டுபிடிப்பு; வானிலிருந்து கடலில் உள்ள கப்பல்களுக்கு பொருட்களை எளிதாக அனுப்பலாம் 

எழுதியவர் Sekar Chinnappan
Mar 11, 2026
08:21 am

செய்தி முன்னோட்டம்

இந்தியக் கடற்படையின் தளவாடத் திறனை மேம்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ADC-150 (Air-Droppable Container) கன்டெய்னரின் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக முடித்துள்ளன. கோவா கடற்கரையில் பிப்ரவரி 21 முதல் மார்ச் 1, 2026 வரை நடைபெற்ற இந்தச் சோதனையில், போயிங் P-8I ரக விமானத்திலிருந்து இந்த கன்டெய்னர்கள் வெற்றிகரமாகக் கீழே இறக்கப்பட்டன.

சிறப்பம்சங்கள்

ADC-150: சிறப்பம்சங்கள் என்ன?

இந்த கன்டெய்னர் மூலம் 150 கிலோ வரையிலான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முடியும். நடுக்கடலில் கரையில் இருந்து வெகுதொலைவில் இருக்கும் கப்பல்களுக்கு அவசர மருத்துவப் பொருட்கள், உயிர் காக்கும் உபகரணங்கள் மற்றும் பிற முக்கியமான பொருட்களை வான்வழியாக அனுப்ப இது உதவும். நான்கு முறை மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், பல்வேறு கடினமான வானிலை மற்றும் வேக நிலைகளில் இந்த அமைப்பு சிறப்பாகச் செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு

கூட்டு முயற்சி

இந்தத் திட்டத்தை விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் முன்னின்று நடத்தியது. மேலும், இதற்கான பாராசூட் சிஸ்டத்தை ஆக்ராவில் உள்ள ADRDE ஆய்வகம் உருவாக்கியது. பெங்களூரு CEMILAC நிறுவனம் விமானப் பாதுகாப்புச் சான்றிதழை வழங்கியது. ஹைதராபாத்தில் உள்ள DRDL ஆய்வகம் வழங்கியது. இந்திய கடற்படையின் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மிகக் குறுகிய காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனைகளும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இது கடற்படையில் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement