
பாஜக'வை விமர்சிக்க வேண்டாம் - அதிமுக தலைமை வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் அண்ணா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில கருத்துக்களை கூறினார்.
அது பெரும் சர்ச்சையான நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலைக்கு எதிராக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அதிமுக கட்சியின் தலைமை ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அதில், "பாஜக'விற்கு எதிராக அதிமுக'வினர் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். அதேபோல் கூட்டணி குறித்தும் கருத்து தெரிவிக்க வேண்டாம். கூட்டணி குறித்து தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், பொதுவில் இதுகுறித்து யாரும் பேச கூடாது" என்று வலியுறுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து பொதுவெளியில் இதுபோன்று கூட்டணி குறித்து பேசினால் குழப்பம் ஏற்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
அதிமுக தலைமை அறிக்கை
#BREAKING ||"பாஜக தலைமைக்கு எதிராக அதிமுகவினர் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்"
— Thanthi TV (@ThanthiTV) September 20, 2023
அண்ணா குறித்து அண்ணாமலை கருத்து கூறியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சனங்களை முன் வைத்த நிலையில் அறிவுறுத்தல்
கட்சியினருக்கு அதிமுக தலைமை வலியுறுத்தல்#Annamalai | #admk pic.twitter.com/hJyuNYq1Aw