
பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த திமுக இளைஞரணியினர் கைது!
செய்தி முன்னோட்டம்
பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக திமுக இளைஞரணியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பொது கூட்டத்திற்கு சென்றிருந்தனர்.
இவர்கள் இருவரும் அங்கிருந்த பெண் காவலர் ஒருவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து, அந்த பெண் காவலர் காவல்துறையில் புகார் அளித்தார்.
நடவடிக்கை
விசாரணை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர்.
பின், சாட்சிகளிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு கீழ் ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திமுக கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொண்டதாலும் கட்சியின் விதிகளை மீறியதாலும் இவர்கள் இருவரும் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இதை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.