"திமுகவை முதுகில் குத்திய காங்கிரஸ்": ராகுல் காந்தியை 'முதிர்ச்சியற்றவர்' என முரசொலி சாடல்
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள சூழலில், தங்களின் பல தசாப்த கால கூட்டாளியான காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு முதுகில் குத்தி துரோகம் இழைத்துள்ளதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி' தனது தலையங்கத்தில் மிகக் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளது. இந்த துரோகம் அனைத்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆசியுடனேயே நடந்துள்ளதாக கூறி, தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணியின் விரிசலை திமுக போட்டுடைத்துள்ளது. அண்மையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து ராகுல் காந்தி பேசியதை "காலம் கடந்த ஞானம்" என்று முரசொலி கேலி செய்துள்ளது. விஜய், தான் 'இந்தியா' கூட்டணியில் இணையப் போவதில்லை என்று கழற்றிவிட்ட பிறகு, ராகுல் 'நல்ல பிள்ளை' போல் நடிக்கத் தொடங்குவதாக முரசொலி விமர்சித்துள்ளது.
குற்றச்சாட்டுகள்
ராகுல் காந்தியை வறுத்தெடுத்த முரசொலி: 4 முக்கியக் குற்றச்சாட்டுகள்
மாநில சட்டமன்றத் தேர்தல்களில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடிப்பதற்காகக் காங்கிரஸ் கட்சி திரைக்குப் பின்னால் மறைமுகக் தந்திரங்களை பயன்படுத்துகிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது மட்டும் அதே கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்ப்பது வெட்கக்கேடானது என்று முரசொலி சாடியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் நீடித்துக் கொண்டே, காங்கிரஸ் கட்சி திமுகவிற்குத் துரோகம் இழைத்தது. தற்போது காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) கைகோர்த்துள்ளதை மறைமுகமாகக் குறிப்பிட்டு, ராகுல் காந்தியின் ஆசியோடுதான் இந்த முதுகில் குத்தும் வேலை நடந்தது என முரசொலி குற்றம் சாட்டியுள்ளது. 'காங்கிரஸ் எதிர்ப்பு' உணர்வு மேலோங்கி இருப்பதற்கு காரணம் ராகுல் காந்தியின் "அரசியல் முதிர்ச்சியின்மையும், நேர்மையின்மையும்" தான். இதற்கு அவரே முழுப் பொறுப்பேற்க வேண்டும். எழுப்பியுள்ளது என கூறியுள்ளது.
அதிருப்தி
கேரளா மற்றும் பிற மாநிலத் தலைவர்களின் அதிருப்தி
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி இருந்ததை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் பிரச்சாரத்தின் போது, "முதலமைச்சர் பினராயி விஜயனை பிரதமர் மோடி ஏன் இன்னும் கைது செய்யவில்லை? இருவருக்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளது"* என்று ராகுல் காந்தி பேசியது அப்பட்டமான பொய் என்றும், அது பாஜகவின் அமலாக்கத்துறைக்கு (ED) ராகுல் காந்தி உதவியாளராகச் செயல்படுவது போல் இருந்தது என்றும் சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ் மற்றும் மார்க்சிஸ்ட் தலைவர் 'பேபி' ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். "இடதுசாரிகள் இனி இடதுசாரிகளாக இல்லை" என்ற ராகுலின் கருத்துக்கு, சிபிஐ பொதுச்செயலாளர் டி. ராஜா, இது ராகுல் காந்தியின் அரசியல் அறியாமையைக் காட்டுகிறது என்று சாடியுள்ளார்.