
ஒருவழியாக கையெழுத்தான அதிமுக-தேமுதிக தேர்தல் பங்கீடு
செய்தி முன்னோட்டம்
நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த தேமுதிக-அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது.
தேமுதிகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அதிமுக அலுவலகம் வந்த பிரேமலதா விஜயகாந்த், தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதன்பின்னர், ஈபிஎஸ் மற்றும் பிரேமலதா இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, அதன்படி, திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
அப்போது பிரேமலதா, "அதிமுகவுடன் கூட்டணி என்பது ராசியான கூட்டணி. இந்த கூட்டணி 2026 தேர்தலிலும் தொடரும். எண்ணிக்கை என்பது முக்கியமல்ல; யார் யார் கூட்டணியில் சேர்கிறார்கள் என்பதுதான் முக்கியம்" என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
அதிமுக-தேமுதிக தேர்தல் பங்கீடு
#BREAKING | அதிமுக - தேமுதிக ஒப்பந்தம் கையெழுத்தானது!#SunNews | #ElectionsWithSunNews | #ADMK | #DMDK pic.twitter.com/B6YpBWavMG
— Sun News (@sunnewstamil) March 20, 2024