NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் பிரச்சனை: இன்று என்ன நடந்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் பிரச்சனை: இன்று என்ன நடந்தது
    டி.கே. சிவக்குமார், துணை முதல்வர் பதவிக்கு தான் தயாராக இல்லை என்று காங்கிரஸ் மேலிடத்திடம் கூறியுள்ளார்.

    கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் பிரச்சனை: இன்று என்ன நடந்தது

    எழுதியவர் Sindhuja SM
    May 17, 2023
    07:24 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக யார் பதவியேற்பார் என்ற போட்டி இன்னும் தொடர்கிறது.

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் இந்த பதிவிக்காக போட்டியிட்டு வருகின்றனர்.

    நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவுக்கு பொறுப்பான AICC பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் பொதுச் செயலாளர்(அமைப்பு) கே.சி.வேணுகோபால் ஆகியோர் கார்கேவுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே.சிவகுமாரும் பதவியேற்பார்கள் என்ற செய்தி வெளியாகி இருந்தது.

    ஆனால், டி.கே. சிவக்குமார், துணை முதல்வர் பதவிக்கு தான் தயாராக இல்லை என்று காங்கிரஸ் மேலிடத்திடம் கூறியுள்ளார்.

    details

    அடுத்த கர்நாடக முதல்வர் யார்: ஆலோசனைகள் இன்னும் தொடர்கிறது 

    'கொடுத்தால் முதல்வர் பதவியை கொடுங்கள் இல்லையென்றால் எதுவும் வேண்டாம்' என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது.

    மேலும், சித்தராமையா மூன்று ஆண்டுகளில் என்ன செய்தார் என்று டிகே.சிவக்குமார் கேள்வி எழுப்பியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இடையே இன்று மாலை 6 மணிக்கு மேல் இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையா பதவியேற்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

    ஆனால், இந்த செய்திகளை நிராகரித்த காங்கிரஸ், கர்நாடக முதல்வர் பதவி குறித்த ஆலோசனைகள் இன்னும் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கர்நாடகா
    கர்நாடகா தேர்தல்
    கர்நாடகா தேர்தல் 2023

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 801 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு கொரோனா
    கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை  பிரிட்டன்
    இந்தியப் பெருங்கடலில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் கடற்படை
    மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது காங்கிரஸ்

    கர்நாடகா

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டி - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு  அதிமுக
    காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா இந்தியா
    கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்று ஆருடம் கூறிய பைரவா நாய்  தேர்தல்
    உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு எதிராக காவல்துறையில் புகார்  இந்தியா

    கர்நாடகா தேர்தல்

    வாக்களிக்காமல் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை: இன்போசிஸ் சுதா மூர்த்தி கர்நாடகா
    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1 இந்தியா
    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 2 கர்நாடகா
    கர்நாடக தேர்தல்: ஜனதா தளத்தை தொடர்புகொண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக  கர்நாடகா

    கர்நாடகா தேர்தல் 2023

    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது இந்தியா
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இந்தியா
    கர்நாடக தேர்தல் 2023: வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்டது, முன்னிலையில் இருப்பது யார்? கர்நாடகா தேர்தல்
    கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025