NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெரு நாய்களுக்கு அலங்காரம் செய்து வழிபாடு - விநோத முறையில் தீபாவளி கொண்டாட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெரு நாய்களுக்கு அலங்காரம் செய்து வழிபாடு - விநோத முறையில் தீபாவளி கொண்டாட்டம்
    தெரு நாய்களுக்கு அலங்காரம் செய்து வழிபாடு - விநோத முறையில் தீபாவளி கொண்டாட்டம்

    தெரு நாய்களுக்கு அலங்காரம் செய்து வழிபாடு - விநோத முறையில் தீபாவளி கொண்டாட்டம்

    எழுதியவர் Nivetha P
    Nov 12, 2023
    12:35 pm

    செய்தி முன்னோட்டம்

    தீபாவளி பண்டிகை மனிதர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்னும் அவசியம் இல்லை என்பதை எடுத்துரைக்கிறது இந்த செய்தி குறிப்பு.

    மேற்கு வங்காளம் சிலிகுரி நகரில் தான் இந்த விநோத தீபாவளி கொண்டாட்டம் நடக்கிறது.

    இந்த கொண்டாட்டம் அப்பகுதியில் குகுர் திகார் அல்லது குரூர் பூஜை என்னும் பெயரில் அறியப்படுகிறது.

    இதன் படி, மேற்கு வங்காளம் சிலிகுரி நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் வைத்து வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமின்றி, தெரு நாய்களையும் குளிக்க வைத்து, சுத்தம் செய்து அதனை அழகாக அலங்கரிக்கிறார்கள்.

    இந்த வினோத கொண்டாட்ட நிகழ்வானது நேற்று(நவ.,11) அரங்கேறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    நாய்கள் 

    விலங்குகளுக்கான உதவி மைய உறுப்பினர் பிரியா ராய் பங்கேற்பு 

    மேலும், தங்கள் சுவையாக விதவிதமாக சமைத்து வைத்துள்ள உணவுகளை நாய்களுக்கு இப்பகுதி மக்கள் அளித்துள்ளனர்.

    இந்த திருவிழா மிக விமர்சையாக நேற்று நடந்த நிலையில், விலங்குகளுக்கான உதவி மைய உறுப்பினர் பிரியா ராய் கலந்துகொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், "மிகுந்த உற்சாகம் மற்றும் ஆர்வத்தோடு இந்த குகுர் திகார் பண்டிகை கொண்டாடப்பட்டது" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், "கடவுளை வழிபடுவது போல் தெரு நாய்களை நாங்கள் வழிபாடு செய்தோம்" என்றும்,

    "எங்களை போல் நீங்களும் உங்கள் பகுதிகளில் உள்ள தெரு நாய்களுக்கு மதிப்பளித்து அதற்கு உணவளியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீபாவளி
    பண்டிகை
    மேற்கு வங்காளம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தீபாவளி

    தமிழ் சினிமாவின் இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள் நெட்ஃபிலிக்ஸ்
    குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக கூறி போலி இணையதள மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை  பண்டிகை
    இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம் தீபாவளி 2023
    தீபாவளி கொண்டாட்டங்கள் எதற்காக எண்ணெய் குளியலுடன் தொடங்குகிறது எனத்தெரியுமா? தீபாவளி 2023

    பண்டிகை

    ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம் உலகம்
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள் இந்தியா
    ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள் வாழ்க்கை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் இந்தியா
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025