
சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயில்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் இங்குவந்து வழிபாடு செய்ய 4 நாட்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் 5ம்தேதி இம்மாதம் சித்ரா பவுர்ணமி மற்றும் 3ம்தேதியான இன்று பிரதோஷம் என்பதால் பக்தர்களுக்கு சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் வரும் 6ம்தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்று வனத்துறையினர் மற்றும் அந்த கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் காலை 7 மணி முதல் 2 மணிவரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடவேண்டியவை.
கோயில்
சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு
மேலும் இந்த கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலையில் அமைந்துள்ள இந்த கோயிலில் இரவில் பக்தர்கள் தங்கவும் தடை என்று கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இந்த அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழை அல்லது நீரோடைகளில் நீரின் வரத்து அதிகரித்து காணப்பட்டால் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி மறுக்கப்படும் என்றும் வனத்துறையினர் மற்றும் அந்த கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
வழக்கத்தை விட சித்ரா பவுர்ணமி தினமன்று பக்தர்கள் கூட்டம் அதிகம் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அங்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறது அந்த கோயில் நிர்வாகம் என்பது குறிப்பிடத்தக்கது.