
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
செய்தி முன்னோட்டம்
அண்மை காலமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலானது அதிகரித்து கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
இதனையொட்டி தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக 1000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அதே போல் பல்வேறு இடங்களில் நடத்தப்படவுள்ள இந்த சிறப்பு முகாம்களில் மக்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் நிலவேம்பு கஷாயமானது வழங்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு மாநிலத்தில் டெங்கு பாதிப்பினை கண்காணிக்க 45 சுகாதார மாவட்டங்களுக்கும் சேர்த்து 9 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு அதிகாரிக்கும் 4ல் இருந்து 5 மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
டெங்கு காய்ச்சல் பரவல்
#BREAKING | தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்!#SunNews | #Denguefever | #TNGovt pic.twitter.com/OK5UyiImYF — Sun News (@sunnewstamil) September 29, 2023