Loading...
தமிழகத்தில் ஒரே நாளில் 228 பேருக்கு டெங்கு: சென்னையில் மட்டும் இத்தனை பேரா?
தமிழகத்தில் ஒரே நாளில் 228 பேருக்கு டெங்கு

தமிழகத்தில் ஒரே நாளில் 228 பேருக்கு டெங்கு: சென்னையில் மட்டும் இத்தனை பேரா?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 21, 2026
11:55 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்றைய ஒரே நாளில் மட்டும் புதிதாக 228 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,277 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை

தலைநகர் சென்னையில் அதிகரிக்கும் வேகம்

மாநிலத்தின் பிற மாவட்டங்களை விடத் தலைநகர் சென்னையில் டெங்கு பாதிப்பு மிக வேகமாகக் பரவி வருகிறது.

நேற்று கண்டறியப்பட்ட புதிய பாதிப்புகளில், சென்னையில் மட்டும் ஒரே நாளில் 79 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத் துறையினரிடையே கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நிலவரப்படி, தமிழகத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 200 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதால், பொதுமக்கள் வீடுகளையும் சுற்றப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், தேங்கி நிற்கும் நன்னீரில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT