LOADING...
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 08, 2026
09:06 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் (ஜனவரி 10, 11) சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதே இந்த மழைக்கு காரணமாகும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement