NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம் 
    டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம் 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 12, 2023
    01:58 pm
    டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம் 
    பள்ளியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது

    தெற்கு டெல்லியில் உள்ள பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பள்ளி மாணவர்கள் இன்று(ஏப் 12) வெளியேற்றப்பட்டனர். வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காலை 10:49 மணியளவில் டெல்லி சாதிக் நகரில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பள்ளிக்கு வெளியே மாணவர்களும் பெற்றோர்களும் கூடி இருப்பது போன்ற காட்சிகளை செய்தி சேனல்கள் வெளியிட்டன. "எங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி பள்ளியிலிருந்து எங்களுக்கு ஒரு செய்தி வந்தது" என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    2/2

    சந்தேகப்படும்படியான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை

    பள்ளி நிர்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நவம்பரில், ஒரு மர்ம நபரிடமிருந்து பள்ளி நிர்வாகிக்கு இதே போன்ற ஒரு மின்னஞ்சல் வந்தது. அது வெறும் மிரட்டல் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எங்கள் குழுக்கள் வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் நாய் படையுடன் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்." என்று மூத்த காவல்துறை அதிகாரி சந்தன் சவுத்ரி செய்தி நிறுவனமான ANIயிடம் தெரிவித்துள்ளார். பள்ளியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுவரை சந்தேகப்படும்படியான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    டெல்லி

    இந்தியா

    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  நரேந்திர மோடி
    பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு கேரளா
    கட்சியில் இருந்து விலகினார் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த லட்சுமண் சவாதி கர்நாடகா
    இந்தியாவில் ஒரே நாளில் 7,946 கொரோனா பாதிப்பு: 16 பேர் உயிரிழப்பு கொரோனா

    டெல்லி

    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை!  ஆப்பிள் நிறுவனம்
    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல் இந்தியா
    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா
    இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023