ஹரியானா இனக்கலவரம்: உஷார் நிலையில் டெல்லி
செய்தி முன்னோட்டம்
நேற்று(ஆகஸ்ட்-1) ஹரியானாவின் நூஹ் மற்றும் குருகிராமில் நடந்த இனக்கலவரங்களை தொடர்ந்து, ஹரியானா காவல்துறை 116 பேரைக் கைது செய்து, 41 FIRகளைப் பதிவு செய்துள்ளது.
திங்கள்கிழமை ஹரியானாவின் நூஹ்வில் தொடங்கிய வகுப்புவாத மோதல்களால் இதுவரை இரண்டு ஊர்க்காவல் படையினர், மூன்று பொதுமக்கள் மற்றும் ஒரு இமாம் உட்பட குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், குருகிராமில் நேற்று இரவு நடந்த புதிய இனக்கலவர வன்முறை சம்பவங்களால் டெல்லி உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குருகிராமில் இருக்கும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோதல்களை தடுக்க பெட்ரோல் மற்றும் டீசலை 'லூசில்' விற்பனை செய்யக்கூடாது என்று குருகிராமில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போயி
டெல்லிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் இன்று டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால், தேசிய தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நூஹ் மோதல்களுக்கு எதிராக டெல்லியில் உள்ள நிர்மான் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அவர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
நேற்று முன்தினம் ஹரியானாவின் நூஹ்கில் இனக்கலவரகள் தொடங்கிய நிலையில், நேற்று ஒரு கும்பல் குருகிராமில் உள்ள பாட்ஷாபூரில் ஒரு உணவகத்திற்கு தீ வைத்து, பக்கத்து கடைகளை சேதப்படுத்தியது.
இதனை தொடர்ந்து, டெல்லி போலீஸார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். டெல்லியில் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேவையான இடங்களில் கூடுதல் போலீஸ் படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.