மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 31 வரை நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியா பிப்ரவரி 2023 முதல் நீதிமன்றக் காவலில் உள்ளார். தற்போது ரத்து செய்யப்பட்ட மதுக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணையில் மணீஷ் சிசோடியா கடத்த வருடம் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது கெஜ்ரிவால் ஜூன் 2 வரை இடைக்கால ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.
இன்று மாலை 5 மணிக்கு ஜாமீன் மனுக்கள் மீதானதீர்ப்பு அறிவிக்கப்படும்
பணமோசடி மற்றும் ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் டெல்லி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயர் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காரணப் பட்டியலின்படி, இரு ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மா இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பார். ஆம் ஆத்மி கட்சி, சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் வாதங்களைக் கேட்ட பிறகு, மே 14 அன்று, டெல்லி உயர் நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.