Loading...
கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள்: தீபாவளிப் பண்டிகை சிறப்பு தொகுப்பு சென்னையில் நாளை தொடக்கம்
தீபாவளிப் பண்டிகை சிறப்பு தொகுப்பு சென்னையில் நாளை தொடக்கம்

கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள்: தீபாவளிப் பண்டிகை சிறப்பு தொகுப்பு சென்னையில் நாளை தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 29, 2026
02:25 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நோக்கில், கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.200 மதிப்பிலான 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வழங்கும் திட்டம் சென்னையில் நாளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படவுள்ளது. தமிழகக் கூட்டுறவுத் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. இச்சிறப்பு மளிகைத் தொகுப்பில் குடும்பங்களுக்கு அன்றாடம் தேவைப்படும் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, சீரகம் மற்றும் சோம்பு உள்ளிட்ட 10 பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

சலுகை

தீபாவளி பண்டிகை காலச் சலுகை

பொதுவாக ரேஷன் கடைகள் வாயிலாக இலவச அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வரும் சூழலில், கூட்டுறவு அங்காடிகள் மூலம் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை இத்திட்டம் தொடங்கி வைக்கப்படுவதைத் தொடர்ந்து, விரைவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவு அங்காடிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் வாயிலாக இத்தொகுப்பு பொதுமக்களுக்கு கிடைக்கப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT