கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - பயனாளிகளுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டு
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமானது தமிழ்நாடு முழுவதும் நாளை(செப்.,15) முதல் துவங்கி வைக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் முடிவுற்று இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 6 லட்சத்தி 50 ஆயிரம் குடும்பத்தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறவுள்ளனர் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்ட பயனாளர்கள் அனைவருக்கும் பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தினை ஏடிஎம் கார்டுகளை வழங்கி துவங்கி வைக்கவுள்ளார். முன்னதாக இந்த திட்டத்திற்கு 1 கோடியே 63 லட்ச விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில் சுமார் 57 லட்ச விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.