'பிற மதங்களைப் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?' உதயநிதி ஸ்டாலினிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி
சில நாட்களுக்கு முன்பு, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது. "சனாதனம் என்பது எதிர்க்க வேண்டிய ஒரு விஷயமல்ல, ஒழிக்க வேண்டிய விஷயம். டெங்கு, மலேரியா, போன்ற நோய்களை நாம் எதிர்க்க முயற்சிக்க மாட்டோம், ஒழித்துக்கட்ட தான் முயல்வோம். அதுபோல் தான் இந்த சனாதானமும்" என்று தமிழக முதல்வர் உதயநிதி அப்போது கூறியிருந்தார். இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இது குறித்து பேசியிருக்கிறார். "மற்ற மதத்தினரை இப்படி அவதூறாகப் பேசுவதற்கு இவர்களுக்கு முதுகெலும்பு இல்லை.. மற்ற மதங்களில் பிரச்சினை இல்லையா? பிற மதங்களில் பெண்களை தவறாக நடத்துவதில்லையா? அதைப் பற்றி பேசத் துணிவீர்களா? உங்களுக்கு தைரியம் இருக்கா?" என்று நிர்மலா-கேள்வி எழுப்பியுள்ளார்.
'பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்': நிர்மலா சீதாராமன்
மேலும், நீங்கள்(உதயநிதி ஸ்டாலின்) அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணம் செய்து அமைச்சரானீர்கள். பதவிப் பிரமாணத்தின் போது மற்றவர்களின் மனதைப் புண்படுத்த மாட்டோம் என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள். அது உங்கள் சித்தாந்தமாக இருந்தாலும், ஒரு மதத்தை அழிப்போம் என்று கூறுவது சரியானது அல்ல" என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் இன்று கூறினார். கூடுதலாக, உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்த மத போதகருக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அகிம்சையின் மீதான தனது நம்பிக்கையை வலியுறுத்தியநிர்மலா சீதாராமன், "வன்முறைக்கு இடமில்லை என்று நான் உறுதியாக நம்பும் போது இதுபோன்ற செயல்களை நான் எப்படி மன்னிக்க முடியும்? பன்முகத்தன்மைக்கு மதிப்பளிப்பது வன்முறையைத் தவிர்ப்பதாகும்." என்று கூறியுள்ளார்.