Loading...
98% பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி! முப்படைகளுக்கும் ₹1.10 லட்சம் கோடியில் அதிநவீன ஆயுதங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல்
ராணுவத்திற்கு ரூ.1.10 லட்சம் கோடி பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல்

98% பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி! முப்படைகளுக்கும் ₹1.10 லட்சம் கோடியில் அதிநவீன ஆயுதங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 07, 2026
07:41 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) கூட்டத்தில், இந்திய முப்படைகளுக்காக சுமார் ₹1.10 லட்சம் கோடி மதிப்பிலான அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான தேவை ஏற்பு கொள்கை (Acceptance of Necessity) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கிய அம்சமாக, மொத்தக் கொள்முதலில் 98 சதவீதப் பொருட்கள் இந்திய உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்பட உள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-

இந்திய ராணுவம்

இந்திய ராணுவத்திற்கான அதிநவீன உபகரணங்கள்

இந்திய ராணுவத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நகர்வுத் திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு அதிநவீன சாதனங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வேதியியல் மற்றும் கதிர்வீச்சு கண்காணிப்பு வாகனங்கள்: ஆபத்தான கதிர்வீச்சு மற்றும் வேதியியல் கழிவுகள் நிறைந்த பகுதிகளைக் கண்டறிந்து கண்காணிக்கும்.

அதிநவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் வாகனங்கள்: கரடுமுரடான எல்லைப் பகுதிகளில் ராணுவப் பொருட்களை விரைவாக எடுத்துச் செல்ல ஹை மொபிலிட்டி வாகனங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள்.

மைன் லேயர்கள் மற்றும் பாலங்கள்: விரைவாகப் கண்ணிவெடிகளைப் பதிக்கும் இயந்திரங்கள், டிரால் டேங்கர்கள் மற்றும் தற்காலிகப் பாதைகளை உருவாக்க உதவும் சர்வத்ரா பிரிட்ஜ் சிஸ்டம்.

இன்ஜின்

கடற்படைக்கான அருத்ரா ரேடார் மற்றும் இன்ஜின் உருவாக்கம்

இந்திய கடற்படைக்காக ஆருத்ரா நவீன ரேடார்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இவை கடற்படை விமான நிலையங்களில் தற்போதிருக்கும் பழைய ரேடார்களுக்குப் பதிலாகப் பொருத்தப்படும்.

மேலும், வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருப்பதை முற்றிலும் குறைக்கும் வகையில், இந்திய போர்க்கப்பல்களுக்கான மரைன் கேஸ் டர்பைன் இன்ஜின்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிப்பதற்கான சிறப்புத் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஸ்மார்ட் கார்டு

விமானப்படை மற்றும் பாதுகாப்புத் துறை ஸ்மார்ட் கார்டு திட்டம்

விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் திட்டங்களுடன், எதிரிகளின் ரேடார்களை முடக்கும் மல்டி-பர்ப்பஸ் ஜாமர்கள் வாங்கப்பட உள்ளன.

இதனுடன், முப்படை முகாம்களில் பழைய காகித அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, ரேடியோ அலைவரிசை நுட்பத்தில் இயங்கும் பாதுகாப்புப் படை ஸ்மார்ட் அட்டை அமைப்பை அறிமுகப்படுத்தவும் DAC கூட்டத்தில் இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT