பழைய பொருட்கள் வாங்க விற்க உதவும் செயலிகள் மூலம் நூதன மோசடி - எச்சரிக்கை!
செய்தி முன்னோட்டம்
பழைய பொருட்களை வாங்க விற்க உதவும் செயலிகளின் ஆபத்தை குறித்து சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, புதுச்சேரி மக்கள் பழைய பொருட்கள் வாங்க விற்க பயன்படுத்தப்படும், OLX, Facebook, Instagram, Second Hand Mall, Koove, ListUp, Tradly, Quikr, Zefo, MaxDeal, EBaySpoyl, Tips To Sell Used Things Online ஆப்கள் வழியாக மோசடி சம்பவங்கள் அரங்கேறுவதாக தெரிவித்துள்ளனர்.
அதாவது மோசடியில் ஈடுபடுபவர்கள் அதிகமாக நான் மத்திய அரசில் பணிபுரிவதாகவும், தற்போது தனக்கு மாறுதல் வந்துவிட்டதால் மேற்கண்ட பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
சைபர் கிரைம் எச்சரிக்கை
புதுச்சேரி மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் விடுத்த எச்சரிக்கை
தொடர்ந்து தங்களால் இந்த பொருட்களை எடுத்து செல்ல முடியாது எனவும், 2 லட்சம் மதிப்புடைய பொருட்களை 90 ஆயிரத்திற்கு தருகிறோம் என பேரம் பேசி அட்வான்ஸ் தொகையை முதலில் யுபிஐ மூலம் செலுத்துமாறு கூறி மோசடி செய்து செல்போனை அணைத்து விடுகிறார்கள்.
இதுபோன்ற மோசடி சம்பவங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் பணம் கொடுக்க வேண்டாம் என புதுச்சேரி மக்களுக்கு காவல் துறையினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டுமே இதுபோன்று 14 புகார்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.