இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 47 புதிய பாதிப்புகள்
நேற்று(ஜூலை 23) 40ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 47ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1, 464ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,95,311) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,915ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்
இந்தியாவில் ஜூலை 22ஆம் தேதி 60 பாதிப்புகளும் ஜூலை 21ஆம் தேதி 109 பாதிப்புகளும் ஜூலை 19ஆம் தேதி 49 பாதிப்புகளும் ஜூலை 183ஆம் தேதி 34 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,61,932 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் இதுவரை பேர் 6,902,047 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, உலகளவில் 691,815,603 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 664,271,897 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் 37,128 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்