Page Loader
இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 34 புதிய பாதிப்புகள்
கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 34 புதிய பாதிப்புகள்

எழுதியவர் Sindhuja SM
Jul 18, 2023
04:37 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று(ஜூலை 17) 43ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 34ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,453ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,915ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

CJW

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37,185 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

இந்தியாவில் ஜூலை 16ஆம் தேதி 59 பாதிப்புகளும் ஜூலை 15ஆம் தேதி 54 பாதிப்புகளும் ஜூலை 14ஆம் தேதி 52 பாதிப்புகளும், ஜூலை 13ஆம் தேதி 48 பாதிப்புகளும் ஜூலை 12ஆம் தேதி 46 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,61,587 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் இதுவரை பேர் 6,899,766 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, உலகளவில் 691,485,488 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 664,068,578 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் 37,185 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்