Page Loader
கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

எழுதியவர் Nivetha P
Apr 06, 2023
11:31 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் தொற்று பாதிப்பு 60ஐ கடந்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழக அரசு மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பொது இடங்களிலும் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் எக்ஸ்பிபி மற்றும் பிஏ2 வகை ஒமைக்ரான் வகையை சேர்ந்த கொரோனா வைரஸ் அதிகளவில் பரவுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

எண்ணிக்கை அதிகரிப்பு

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் கடிதம்

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க கூறி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில் அவர், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 50க்கும் குறைவாக தமிழகத்தில் இருந்தது. ஆனால் அதுவே மார்ச் மாத கடைசியில் 689ஆக அதிகரித்தது. அதே போல் கொரோனா தொற்று பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையும் 0.6ல் இருந்து 3%ஆக உயர்ந்துள்ளது. எனவே, தற்போது தமிழகத்தில் 3000 தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையானது 11,000ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.