LOADING...
"எதிரிகளல்ல, நாம் கூட்டாளிகள்!": இந்தியாவிடம் சமரசம் பேசும் சீனா
இந்தியாவிடம் சமரசம் பேசும் சீனா

"எதிரிகளல்ல, நாம் கூட்டாளிகள்!": இந்தியாவிடம் சமரசம் பேசும் சீனா

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2026
07:33 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவில் நிலவி வரும் கசப்புணர்வை குறைத்து, அதை சீரமைக்கும் நோக்கில் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையிலான 'வியூக ரீதியிலான பேச்சுவார்த்தை' செவ்வாயன்று புது டெல்லியில் நடைபெற்றது. இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் சீன வெளியுறவுத்துறை இணையமைச்சர் மா ஜாவோக்ஷு ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட சீனா, "இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் போட்டியாளர்கள் அல்ல, மாறாகக் கூட்டுப்பங்காளிகள். இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் அச்சுறுத்தலாக இருக்காமல், வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகக் கருத வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது. மேலும், 2026 மற்றும் 2027-ம் ஆண்டுகளில் முறையே இந்தியா மற்றும் சீனா பிரிக்ஸ்(BRICS) கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குவதற்குப் பரஸ்பரம் ஆதரவளிக்க இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.

நிலைப்பாடு

இந்தியாவின் வலியுறுத்தல்

இந்தியத் தரப்பில், இரு நாடுகளுக்கு இடையிலான ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எல்லையில் அமைதி மற்றும் சகஜ நிலை நிலவுவது மிக அவசியம் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. கிழக்கு லடாக் எல்லை பகுதியில் நிலவிய ராணுவ பதற்றத்திற்கு பிறகு, உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், கைலாஷ் மானசரோவர் யாத்திரையை விரிவுபடுத்துதல், விமான சேவை ஒப்பந்தத்தை புதுப்பித்தல் மற்றும் விசா நடைமுறைகளை எளிதாக்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க மாற்றமாக, ஐநா பாதுகாப்பு சபையில் (UNSC) நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான இந்தியாவின் விருப்பத்தை சீனா புரிந்துகொண்டு மதிப்பளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement