பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை 2023ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் வரும் 12ம் தேதி பொங்கல் பெருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு வருகை தருமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி, பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை(ஜனவரி 12ம் தேதி) மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த பொங்கல் பெருவிழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு இந்த அழைப்பிதழ் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அழைப்பிதழ் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக இலட்சினைக்கு பதிலாக மத்திய அரசு இலட்சினை - மீண்டும் சர்ச்சை
மேற்கூறியவாறு, அந்த அழைப்பிதழலில் 'தமிழ்நாடு ஆளுநர்' என்று குறிப்பிடாமல் 'தமிழக ஆளுநர்' என்று அச்சிடப்பட்டிருந்தது. மேலும் அதில் தமிழ்நாடு இலட்சினை இல்லாமல், மத்திய அரசின் இலட்சினை அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஓர் சர்ச்சையினை ஆர்.என்.ரவி கிளப்பியுள்ளார். முன்னதாக, நேற்று நடந்த சட்டப்பேரவையில் நிகழ்வுகள் தொடர்பாகவும், தமிழ்நாடு அரசு, திராவிட மாடல், அரசின் பாராட்டுக்கள் என அனைத்தும் ஆளுநர் கையில் அச்சிடப்பட்டு கொடுக்கப்படும், அதனைத்தான் ஆளுநர் உரையில் அவர் பேச வேண்டும். ஆனால் நேற்று அதிலுள்ளவற்றை படிக்காமல் வேறு சிலவற்றை அவர் பேசினார். இதனையடுத்து ஆளுநர் உரையில் உள்ளவை தான் அவை குறிப்பாக இருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் ஒன்றினை கொண்டுவந்தார். அதற்கும் ஆளுநர் அதிகாரபூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.