சாதிவாரி கணக்கெடுப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை கொண்ட காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஐந்து நீதித் தூண்களை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், வேலை வாய்ப்புகள், சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 'பாஞ்ச் நியாய்' அல்லது ஐந்து நீதித் தூண்கள்: 'யுவ நியாய்','நாரி நியாய்','கிசான் நியாய்','ஷ்ரமிக் நியாய்' மற்றும் 'ஹிஸ்ஸேதாரி நியாய்' ஆகியவை ஆகும். கட்சியின் தேர்தல் அறிக்கையின்படி, சாதிகள், துணை ஜாதிகள் மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை கணக்கிடுவதற்காக நாடு தழுவிய சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் நடத்தும். பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றும் என்று கட்சி உத்தரவாதம் அளிக்கிறது.
வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு, அனைத்து சாதிகள் மற்றும் சமூகங்களுக்கு பாகுபாடின்றி செயல்படுத்தப்படும். பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் உள்ள அனைத்து பின்னடைவு காலியிடங்களையும் ஒரு வருட காலத்திற்குள் கட்சி நிரப்பும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வழக்கமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை காங்கிரஸ் ரத்து செய்து, அத்தகைய நியமனங்களை முறைப்படுத்துவதை உறுதி செய்யும். பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான நிதி, குறிப்பாக உயர்கல்விக்காக இரட்டிப்பாக்கப்படும். ஏழைகள், குறிப்பாக பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான குடியிருப்புப் பள்ளிகளின் வலையமைப்பை காங்கிரஸ் நிறுவி, ஒவ்வொரு தொகுதிக்கும் விரிவுபடுத்தும்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை
The Congress party shall be unveiling its Manifesto today. Our 5 NYAY — 25 GUARANTEE agenda represents our non-negotiable commitment to the welfare of Nation. Since 1926 till date, the Congress Manifesto is a solemn document of the inseparable trust between us and the People... pic.twitter.com/mb2WtQjiJ0— Mallikarjun Kharge (@kharge) April 5, 2024