
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியா கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சி, இறுதியாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
நாடு முழுவதும் தொகுதிப் பங்கீடு மற்றும் சீர்திருத்தங்களுக்காக கட்சித் தலைவர்கள் கூட்டணிக் கட்சிகளை அணுகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தேவைப்பட்டால், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று எதிர்க்கட்சித் தலைவர்களையும் காங்கிரஸ் சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையிக்கு முன்னதாக இந்த தொகுதி-பகிர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
card 2
நேற்று மாலை நடைபெற்ற கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு
தொகுதி பங்கீடு குறித்து முடிவு எட்டப்பட்டவுடன், உடனடியாக வேட்பாளர் பட்டியலும் விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று மாலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் முகுல் வாஸ்னிக் தலைமையிலான தொகுதி பகிர்வுக் குழுவும் கலந்து கொண்டது.
இந்த குழுவில் முன்னாள் முதல்வர்கள் அசோக் கெலாட் மற்றும் பூபேஷ் பாகேல் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
நேற்று திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலினும் ராகுலை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தொகுதி பங்கீடு பற்றி அவர் விவாதித்தாரா என்பது பற்றி தெரியவில்லை.