NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வருமானவரித்துரையும், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கும்; என்ன நடந்தது? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வருமானவரித்துரையும், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கும்; என்ன நடந்தது? 
    காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் விவேக் தங்கா, மொத்தம் நான்கு கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

    வருமானவரித்துரையும், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கும்; என்ன நடந்தது? 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2024
    01:25 pm

    செய்தி முன்னோட்டம்

    பொதுத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள், இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்டவை வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதாக இன்று காலை, காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

    இருப்பினும், காங்கிரஸ் அறிவிப்பை வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, டெல்லியில் உள்ள வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) அக்கட்சி மேல்முறையீடு செய்த பின்னர், கணக்குகள் செயல்பாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    முன்னதாக, இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், காங்கிரஸின் பொருளாளர் அஜய் மாக்கன், கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்ட்டுள்ளதாக தெரிவித்து, இந்த நடவடிக்கை "ஜனநாயக செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கை" என்று விவரித்தார்.

    அதோடு இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து ரூ.210 கோடி அபராதமாக வருமான வரித்துறை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அரசியல் பழிவாங்கல்

    அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது 

    "இது ஜனநாயக நடவடிக்கை இல்லை; இது ஒரு ஆளும் கட்சி பழிவாங்கல். நாங்கள் நீதித்துறை, ஊடகங்கள் மற்றும் மக்களிடம் நியாயம் கேட்கிறோம்,"என்று அஜய் மக்கன் கூறினார்.

    காங்கிரசின் தேர்தல் ஆயத்தங்களை சீர்குலைப்பதற்காகவே, சமயம் பார்த்து, தேர்தல் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது.

    இந்த விவகாரம் தற்போது வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் உள்ள நிலையில், முடக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் கட்சி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கன் கூறினார்.

    மேலும், விசாரணை நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு விவரங்களை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்ததாக அஜய் மக்கன் விளக்கினார்.

    2018-19 தேர்தல் ஆண்டில், காங்கிரஸ் தனது கணக்குகளை 45 நாட்கள் தாமதமாக சமர்ப்பித்தது தான் முடக்கத்திற்கான காரணம் வருமானவரித்துறை கூறுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வருமான வரி சட்டம்
    வருமான வரித்துறை
    காங்கிரஸ்

    சமீபத்திய

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை

    வருமான வரி சட்டம்

    'புஷ்பா' படக்குழுவிற்கு வந்த சோதனை; வருமானவரி துறையை தொடர்ந்து, அமலாக்க துறையும் சோதனை  கோலிவுட்
    ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக தொடரும் IT ரெய்டு தமிழ்நாடு
    வருமான வரி ஏய்ப்பு குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! வருமான வரி விதிகள்
    மாத சம்பளதாரரா நீங்கள்.. அப்போ படிவம் 16-ப் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! வருமான வரி விதிகள்

    வருமான வரித்துறை

    கரூரில் 8 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவு  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை: கரூரில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை செந்தில் பாலாஜி
    வருமான வரி செலுத்துபவர்களுக்கு வருமான வரித்துறை வெளியிட்ட AIS செயலியைப் பற்றித் தெரியுமா? இந்தியா

    காங்கிரஸ்

    'வேலையில்லாத் திண்டாட்டம் தான் நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறலுக்கு காரணம்': ராகுல் காந்தி  நாடாளுமன்றம்
    மத்தியப் பிரதேச காங்கிரஸின் மாநில பொது செயலாளர் ஆனார் ஜிது பட்வாரி  மத்திய பிரதேசம்
    நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்  நாடாளுமன்றம்
    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை இந்திய அணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிய திட்டம் மல்லிகார்ஜுன் கார்கே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025