தரமற்ற குடிநீர் குளிர்பானம் வழங்கினால் இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்!
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் குடிநீர் மற்றும் குளிர்பானம், பழச்சாறு விற்பனைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால், இதில் தரமற்ற குடிநீர் மற்றும் குளிர்பானம், பழச்சாறுகளை விற்பதால் பொதுமக்களுக்கு உடல் நலக்கோளாறு, வயிற்றுபோக்கு போன்ற பல உடல் உபாத பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் குடிநீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் தரமற்றதாக இருந்தால் உடனடியாக 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம் எனக்கூறியுள்ளனர். உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து அதற்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.