
IKEA ஷோரூமில் துணிப்பைக்கான கட்டணத்திற்கு எதிர்ப்பு - ரூ.3000 இழப்பீடு வழங்க உத்தரவு
செய்தி முன்னோட்டம்
கர்நாடகா மாநிலம் பெங்களூர் மாநகரில் செயல்பட்டு வரும் பிரபல ஷோரூம் IKEA.
இங்கு வீட்டிற்கு தேவையான அனைத்து உபயோக பொருட்களும் கிடைக்கும் என்பதால் இந்த ஷோரூம் எப்பொழுதுமே கூட்டமாக காணப்படும்.
இந்நிலையில், இந்த ஷோரூம் நிர்வாகத்தின் மீது பெண் ஒருவர் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் புகார் அளித்துள்ளார்.
விஷயம் என்னவென்றால், இந்த ஷோரூமில் வாங்கப்பட்ட பொருட்களை போட்டு கொடுத்த துணிப்பை ஒன்றிற்கு ரூ.20 கட்டணமாக அந்த பெண்ணிடம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அந்த பெண் புகாரளித்துள்ளார்.
மேலும், ரூ.20க்கு கொடுக்கப்பட்ட அந்த துணிப்பையில் அந்த நிறுவனத்தின் பெயரும் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து இது வணிக சட்டத்தின்படி தவறு என்று கூறியுள்ள தீர்ப்பாயம், புகாரளித்த அப்பெண்ணிற்கு ரூ.3000 வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ரூ.20க்கு ஆசைப்பட்டு ரூ.3,000 பறிபோன சம்பவம்
#NewsUpdate | ₹20 துணிப்பைக்கு ₹3000 இழப்பீடு!#SunNews | #IKEA | #Bengaluru pic.twitter.com/fbZIlJyU4z
— Sun News (@sunnewstamil) October 23, 2023