LOADING...
மெட்டா நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை.. கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு!
காவல்துறையின் உத்தரவுகளை பின்பற்றாத மெட்டா அதிகாரிகள்

மெட்டா நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை.. கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு!

எழுதியவர் Prasanna Venkatesh
May 03, 2023
11:51 am

செய்தி முன்னோட்டம்

தங்களுடைய உத்தரவுகளை பின்பற்றாத மெட்டா நிறுவன அதிகாரிகளை ஆஜாராக கோயம்புத்தூர் நகர காவல்துறை உத்தரவிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மூன்று இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்க கோயம்புத்தூர் காவல்துறை மெட்டா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது. பயங்கர ஆயுதங்களுடன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவுகள் இட்டு இரண்டு பிரிவினரிடையே விரோதத்தை வளர்க்கும் வகையில் செயல்பட்ட மூன்று கணக்குகளை நீக்கக் கோரி கோயம்புத்தூர் காவல்துறை கோரிக்கை விடுத்திருக்கிறது.

கோயம்புத்தூர்

ஆஜாராக உத்தரவு பிறப்பிக்க முடிவு: 

இது குறித்து விரிவான தகவல்களை அந்நிறுவனத்திற்கு அனுப்பியும், அதனைத் தொடர்ந்து ஏழு முறை அதனை நீக்கிக் கோரி ஞாபகப்படுத்தியும், அந்நிறுவனம் காவல்துறையினரின் எந்தவொரு உத்தரவுகளையும் பின்பற்றவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட மூன்று இன்ஸ்டாகிராமில் கணக்கில் பதிவிட்ட பதிவுகளாலும் சில கொலைகளும் கூட நிகழ்ந்திருப்பதாக கோயம்புத்தூர் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், மெட்டா நிறுவன அதிகாரிகள் இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அது குறித்து அவர்கள் ஆஜராகி விளக்கமிளிக்க உத்தவிடவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் கோயம்புத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் V.பாலகிருஷ்ணன்.