Loading...
தமிழக முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணம்: லண்டனில் ரூ. 11,000 கோடி மெகா முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து
லண்டனில் ரூ. 11,000 கோடி மெகா முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து

தமிழக முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணம்: லண்டனில் ரூ. 11,000 கோடி மெகா முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து

எழுதியவர் Venkatalakshmi V
Sep 14, 2026
06:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழக தொழில் துறையில் ஒரு மிகப்பெரிய வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர், செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 17 வரை இங்கிலாந்தில் தங்கி பல்வேறு முக்கிய முதலீட்டு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இதன் தொடர்ச்சியாக, இன்று (செப்டம்பர் 14, 2026) லண்டனில் நடைபெற்ற நிகழ்வில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ. 11,000 கோடி மதிப்பிலான மெகா முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அம்சங்கள்

முதலீட்டின் முக்கிய அம்சங்கள் & வேலைவாய்ப்பு

MoUவின்படி, மொத்த முதலீடு ரூ. 11,000 கோடியாகும், இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 7,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

குறிப்பாக டிசைனிங், இன்ஜினியரிங், உற்பத்தி, அசெம்பிளி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் & சம்வர்தனா மதர்சன் குழுமத்திற்கு இடையே முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

லண்டனில் நடைபெற்ற இந்த ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வில், சம்வர்தனா மதர்சன் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் தலைவர் பாரி மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், IAS ஆகியோர் கையெழுத்திட்டு ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் இங்கிலாந்துக்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT