Loading...
'கைதிகளை தண்டிப்பதை விட நல்வழிப்படுத்த வேண்டும்': புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் விசிட்
புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

'கைதிகளை தண்டிப்பதை விட நல்வழிப்படுத்த வேண்டும்': புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் விசிட்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 28, 2026
04:55 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் திட்டப் பணிகளுக்கும் திடீர் விஜயம் செய்து வரும் முதல்வர் ஜோசப் விஜய், இன்று சென்னை புழல் மத்திய சிறை வளாகம் மற்றும் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மத்திய விசாரணைச் சிறை, தண்டனைச் சிறை மற்றும் மகளிர் சிறை என 3,500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள புழல் சிறை வளாகத்திற்கு நேரில் சென்ற அவர், அங்கிருக்கும் கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ஆய்வு

புழல் சிறையில் முதல்வர் ஆய்வு செய்த முக்கிய அம்சங்கள்

கைதிகளுக்கு தயாரிக்கப்படும் உணவுக்கூடத்திற்கு நேரில் சென்று உணவின் தரம் மற்றும் சுவையை ஆய்வு செய்தார்.

சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையை பார்வையிட்டு, கைதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது அதிகாரிகளிடம் பேசிய முதல்வர்,"கைதிகளை தண்டிப்பதை விட, சிறைக்காலத்தில் அவர்களை நல்வழிப்படுத்துவதே முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

கூடுதலாக, சிறை வளாகத்தில் அமைந்துள்ள புழல் காவல் நிலையத்திற்கும் சென்று அங்கு பதிவாகும் வழக்குகள் மற்றும் காவலர்களின் பணிச்சூழல் குறித்தும் ஆய்வு நடத்தினார்.

ADVERTISEMENT

பட்டியல்

முதல்வர் விஜய்யின் தொடர் 'திடீர் விசிட்' பட்டியல்

முதல்வர் விஜய் பதவி ஏற்ற மே மாதம் முதல் இதுவரை மேற்கொண்டுள்ள முக்கிய ஆய்வுகள்:

எழும்பூர் அரசு மருத்துவமனை: பச்சிளம் குழந்தைகள் வார்டில் ஆய்வு மேற்கொண்டு தாய்மார்களிடம் நலம் விசாரித்தார்.

பெரம்பூர் பேருந்து நிலைய நிர்வாக அலுவலகம்

பிற்படுத்தப்பட்டோர் நல அரசு மாணவர் விடுதி: மாணவர்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார்.

திருவள்ளூர் சிப்காட் & நெம்மேலி ஆலை: சிப்காட் தொழில் வளாகம் மற்றும் கடல்நீரை நல்லீராக்கும் ஆலை பணிகளைப் பார்வையிட்டார்.

கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை: கழிவுநீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

சென்னை மெட்ரோ ரயில்: மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பயணிகளுடன் ரயிலில் பயணித்து செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

ADVERTISEMENT