மனு அளித்த ஒரே நாளில் பணி நியமன ஆணை: மாற்றுத்திறனாளி இளைஞரின் வாழ்வில் ஒளிஏற்றிய முதல்வர் விஜய்
செய்தி முன்னோட்டம்
சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய (ITI) வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அதிநவீன திறன் பயிற்சி ஆய்வகங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளைப் பார்வையிட்ட அவர், அவர்களின் திறமைகளைப் பாராட்டி வாழ்த்தியதோடு குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சியின் போது, அக்கூட்டத்தில் கலந்துகொண்ட தினேஷ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர், தன் வாழ்வாதாரத்திற்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குமாறு முதலமைச்சர் விஜய்யிடம் நேரில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அவரின் கோரிக்கையை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பணி நியமன ஆணை
ஒரே நாளில் கையில் கிடைத்த பணி நியமன ஆணை
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அந்த மனு மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளருக்கான பணி நியமன ஆணை தயாரித்து தினேஷிடம் வழங்கப்பட்டது.
மனு அளித்த ஒரே நாளில் மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்றி, அவரது வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்துள்ள முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
நேற்று (28.10.2026) கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளி திரு. வீ. தினேஷ் அவர்கள் வேலைவாய்ப்பு கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 29, 2026
அந்த மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து, இன்று (29.10.2026) அயல்நாட்டு… pic.twitter.com/rM0se3JoC5