
"கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!": கமல்ஹாசனுக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 70வது வயதை எட்டுகிறார்.
திரைத்துறையில் பல சாதனைகளை புரிந்த உலகநாயகனுக்கு திரைத்துறை தாண்டி, அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்து செய்தியை பதிவு செய்துள்ளார்.
அதில், "பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு - பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் - மக்கள் நீதி மன்றத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் தொண்டு சிறக்க விழைகிறேன்!" என பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) November 7, 2024
திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு - பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் - @maiamofficial-இன் தலைவர் @ikamalhaasan அவர்களின்… pic.twitter.com/eOmJaACRqg