NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 24, 2024
    08:10 am

    செய்தி முன்னோட்டம்

    ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் விழாவும் நடைபெறும்.

    குறிப்பாக, மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், அதனைத்தொடர்ந்து, பாலமேடு, மற்றும் உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

    ஆனால், இத்தனை காலமும், இந்த ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனியாக இடம் எதுவும் இல்லாமல் இருந்தது.

    வாடிவாசல் அருகேயுள்ள பிரதான காலரியில் முக்கிய பிரமுகர்கள் அமர்வதுக்கு மட்டும் தற்காலிக இடம் அமைக்கப்பட்டு வந்தது.

    பொதுமக்களும், பார்வையாளர்களும் அமர சரியான இடம் இருந்ததில்லை. இது ஒரு கோரிக்கையாக வைக்கப்பட்டது.

    அதற்காக, தமிழக அரசு சார்பில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

    card 2

    ஜல்லிக்கட்டு மைதானம் இன்று திறப்பு

    இந்த பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம், 66 ஏக்கர் பரப்பளவில், ரூ.44 கோடி மதிப்பில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த பிரமாண்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த பிரமாண்ட மைதானத்தை இன்று முதல்வர் திறக்கவுள்ளார். முதல் நாளே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக தலா ஒரு மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்படவுள்ளன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JustIn | மதுரை கீழக்கரையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக தலா ஒரு மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்படவுள்ளன!#SunNews | #MKStalin |… pic.twitter.com/NnI2qdCVZc

    — Sun News (@sunnewstamil) January 23, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதல் அமைச்சர்
    ஸ்டாலின்
    ஜல்லிக்கட்டு
    அலங்காநல்லூர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    முதல் அமைச்சர்

    ராணிப்பேட்டை பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி: முதலமைச்சர் ஸ்டாலின்  ஸ்டாலின்
    தேசிய குழந்தைகள் தினம்: முதலைச்சர் ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல் உள்ளிட்டோர் வாழ்த்து ஸ்டாலின்
    தேசிய பத்திரிகை தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மு.க ஸ்டாலின்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி

    ஸ்டாலின்

    முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை வருகை; போக்குவரத்து மாற்றம் முதல் அமைச்சர்
    'இண்டியா' ஆலோசனை கூட்டம் இன்று தொடக்கம்: தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து ஆலோசனை தேர்தல்
    'மும்பை வாக்': மும்பை தெருக்களில் நடைப்பயிற்சி செய்யும் முதல்வர்  ஸ்டாலின் முதல் அமைச்சர்
    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு

    ஜல்லிக்கட்டு

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு மாவட்ட செய்திகள்
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  தமிழ்நாடு

    அலங்காநல்லூர்

    ஜல்லிக்கட்டுக்கான அரங்கம் தயார்; கடைசி நிமிடத்தில் பீட்டா வைத்த செக்-மேட் ஜல்லிக்கட்டு
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயரை சூட்டிய தமிழக அரசு ஜல்லிக்கட்டு
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: கொடியசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி ஜல்லிக்கட்டு
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரி 24இல் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் பொங்கல் திருநாள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025