Page Loader
சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி கட்டிடம் - அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின் 
சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி கட்டிடம் - அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்

சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி கட்டிடம் - அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின் 

எழுதியவர் Nivetha P
Jul 12, 2023
03:55 pm

செய்தி முன்னோட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சென்னை சைதாப்பேட்டை பகுதியிலுள்ள எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி அருகே உள்ள காலியிடத்தில், 10 தளங்களுடன் கூடிய நவீன வசதி கொண்ட விடுதி கட்டப்படவுள்ளது. அதன்படி இன்று(ஜூலை.,12) ரூ.44 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள விடுதி கட்டிடத்திற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னையில் செயல்படும் கல்லூரிகளில் பயில வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்கவே, தற்போதுள்ள தங்கும் விடுதியினை கடந்த 1961ம் ஆண்டு அப்போதைய முதல்வரான திரு.காமராஜ் அவர்கள் கையால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விடுதியில் உயர்கல்வி பயின்று, இதுவரை கிட்டத்தட்ட 25,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

விடுதி 

சுமார் 1,01,101 பரபரப்பளவில் கட்டப்படவுள்ள புதிய விடுதி

இதனை தொடர்ந்து, அதற்கு மேலான அளவில் மாணவர்கள் தங்கி பயனடைய வேண்டும் என்பதனை மனதில் கொண்டே, தற்போது இந்த 10 தளம் கொண்ட, நவீன வசதிகளோடு, சுமார் 1,01,101 பரபரப்பளவில், புதிய விடுதியினை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கான அறிவிப்பு 2022-23ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரில், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பம், கலைத்துறை, அறிவியல்துறை உள்ளிட்ட பல துறைகளில் சேர்ந்து பயிலும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அவர்களது தேவையினை பூர்த்தி செய்யும் விதத்திலேயே இந்த விடுதி கட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.