ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
செய்தி முன்னோட்டம்
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க ஸ்பெயின் சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மாநாட்டில் பேசிய முதல்வர்,"ஸ்பெயின் நாட்டின் தலைநகரான 'மேட்ரிட்' நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல் முறை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிக முக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சராக நான் இருக்கிறேன்".
"தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம். எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
ஸ்பெயின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்
#WATCH | "இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது"
— Sun News (@sunnewstamil) January 30, 2024
- ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை#SunNews | #Spain | #MKStalin | @mkstalin pic.twitter.com/KfClM5sy8o