
சித்திரைத் திருவிழா: "டிராக் அழகர்" செயலியை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, வரும் ஏப்ரல் 29 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 15 நாட்கள் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேலான கூட்டம் வரலாம் என மதுரை மாநகராட்சி கணிக்கிறது.
இந்த நிலையில் மதுரை மக்களிடம் இருந்தும், பக்தர்களிடம் இருந்தும், பண்டிகை நாள்களில் கள்ளழகர் எதிர்சேவை, அம்மன், சுவாமி உலா போன்ற நிகழ்ச்சிகளில், அழகரின் இருப்பிடத்தை நேரடியாக காண 'டிராக் அழகர்' என்ற ஜிபிஎஸ் வசதியுள்ள மொபைல் செயலியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
உள்ளூர் விடுமுறை
மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அழகர்கோயிலில் சித்திரை விழா மே 8ஆம் தேதி தொடங்குகிறது.
மே 9: சுந்தரராஜப்பெருமாள், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல்
மே 10: மாலை 6 மணிக்கு அழகர் மதுரை நோக்கி புறப்பட்டு வருகிறார்
மே 11: மூன்றுமாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி
மே 12: காலை 6.05 மணிக்குள், அழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள். இதை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள், பாதுகாப்பு மற்றும் நெரிசல் தவிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும் மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.