பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்க்காதவர்கள் கவனத்திற்கு!
பெற்றோர்கள் கவனத்திற்கு, உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்களில் அவர்களின் பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தால், இந்த ஆண்டின் இறுதிக்குள் சேர்த்துக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனரும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவாளருமான செல்வவிநாயகம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் குழந்தை பிறந்ததும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது சுகாதாரத்துறை வாயிலாக, பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அச்சான்றிதழ்களில், குழந்தை பிறந்த, 15 ஆண்டுகளுக்குள் பெயர் சேர்க்க வேண்டும். அவ்வாறு பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிசம்பர், 31க்குள் பெயர் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குனர்கள், பள்ளி மாணவர்களின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.