Page Loader
25,631 அடிப்படை பழங்குடியின மேம்பாட்டு திட்டங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25,631 அடிப்படை பழங்குடியின மேம்பாட்டு திட்டங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

25,631 அடிப்படை பழங்குடியின மேம்பாட்டு திட்டங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எழுதியவர் Nivetha P
Dec 27, 2023
02:23 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(டிச.,27) நடைபெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, 'பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 25,631 அடிப்படை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர், 'மக்கள் மத்தியில் தீண்டாமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த மனிதநேய வார விழா நடத்தப்படுகிறது. நிர்வாக ரீதியாக எல்லோருக்கும் எல்லாம் என்பது கொண்டுவருகிறோம்' என்று கூறினார். மேலும் அவர், கருணை அடிப்படையில் 102 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்றும், ரூ.10 கோடி மதிப்பில் தூய்மை பணியாளர் நல வாரியத்தினை சேர்ந்த 87.327 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

பயனாளி 

புதிய திட்டத்திற்கான பணிகளை துவங்க அடிக்கல் நாட்டப்பட்டது 

இதனிடையே, சிந்தனை மற்றும் சமூக வளர்ச்சிகள் மக்கள் மனதில் ஏற்பட வேண்டும் என்று குறிப்பிட்ட பேசிய முதல்வர், இந்த விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு நிறைவுற்ற ரூ.171 கோடி மதிப்புள்ள திட்ட பணிகளை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, புதிய திட்டத்திற்கான பணிகளை துவங்க அடிக்கல் நாட்டியுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. இதுமட்டுமில்லாமல், ரூ.184 கோடி மதிப்பிலான அரசின் நல திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.