LOADING...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
டெல்லி சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைகுலுக்கினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

எழுதியவர் Sindhuja SM
Sep 10, 2023
09:39 am

செய்தி முன்னோட்டம்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜி20 தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்தளித்தனர். அந்த விருந்தில் நாட்டில் உள்ள முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில், இதற்காக நேற்று டெல்லி சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைகுலுக்கினார். இந்த சந்திப்பு நடைபெறும் போது பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்(ட்விட்டர்) பகிர்ந்துள்ளார். இதனையடுத்து, இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு